fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹெரோயின் மற்றும் என்சி போதைப்பொருளுடன் இரு ஜேர்மன் பெண்கள் கைது

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 22, 2019 16:40

ஹெரோயின் மற்றும் என்சி போதைப்பொருளுடன் இரு ஜேர்மன் பெண்கள் கைது

ஹெரோயின் மற்றும் என்சி போதைப்பொருளுடன் இரு ஜேர்மன் பெண்களை ஹட்டன் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஜேர்மனிலிருந்து நுவரெலியா பகுதிக்கு சுற்றுலா பயணியாக வருகைதந்த குறித்த இரு பெண்களும் வாடகை காரொன்றில் நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்தனர். இச்சந்தர்ப்பத்தில் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் வைத்து பொலிஸார் காரை பரிசோதனை செய்த போது அவர்களிடமிருந்து போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. அவர்களை இன்றையதினம் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 22, 2019 16:40

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க