fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கருங்கடலில் சரக்கு கப்பல் விபத்துக்குள்ளாகியதில் 11 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 22, 2019 12:50

கருங்கடலில் சரக்கு கப்பல் விபத்துக்குள்ளாகியதில் 11 பேர் பலி

ரஷ்யாவுக்கு அருகாமையில் கருங்கடலில் இரண்டு சரக்கு கப்பல்கள் தீக்கிரையாகியுள்ளன. சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. தன்ஷானியாவுக்கு சொந்மான வெனீஸ் மற்றும் மையஸ்ரோ என்ற என்ற இரு கப்பல்களுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது. இதில் ஒரு கப்பலில் எரிவாயு கொண்டு செல்லப்படுவதுடன் இதிலிருந்து மற்றைய கப்பலுக்கு எரிபொருளை வழங்கும் போதே வெடிப்பு சம்பவமொன்று ஏற்பட்டுள்ளது. இதன்பின்னர் தீ பற்றிக்கொண்டதாக ரஷ்ய அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இதனைத்தொடர்ந்து கப்பலில் இருந்த ஊழியர்களும் கப்பல் ஓட்டிகளும் கடலில் குதித்துள்ளதுடன் அவர்களை காப்பாற்றும் மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. துருக்கி மற்றும் இந்திய கப்பல் ஓட்டிகள் கப்பலில் இருந்துள்ளனர். இதுவரை 14 பேர் மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 22, 2019 12:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க