fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு சீருடை அறிமுகம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 21, 2019 14:48

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு சீருடை அறிமுகம்

இன்று முதல் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு சீருடைகள் வழங்கப்படவுள்ளன. இதற்கென உத்தியோகபூர்வ சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய வீதி பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார். இந்நிலையில் சில முச்சக்கர வண்டிகளின் சாரதிகள் நாகரிகமான முறையில் உடைகளை அணிந்து பயணிப்பதில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 2 வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட செயலமர்வுகளில் தமக்கான சீருடையொன்றை வழங்குமாறு முச்சக்கர வண்டி சாரதிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தேசிய வீதி பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை குறித்த நடவடிக்கைக்கு சில முச்சக்கர வண்டி சாரதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 21, 2019 14:48

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo