fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கல்வியற் கல்லூரிகளில் இம்முறை 8 ஆயிரம் மாணவர்கள் இணைத்துக்கொள்ள நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 21, 2019 11:08

கல்வியற் கல்லூரிகளில் இம்முறை 8 ஆயிரம் மாணவர்கள் இணைத்துக்கொள்ள நடவடிக்கை

கல்வியற் கல்லூரிகளில் இம்முறை 8 ஆயிரம் மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. தேசிய பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் மே மாதம் கல்வியற் கல்லூரிகளுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இம்மாத நடுப்பகுதியில் வெளியிடப்படவுள்ளது. கடந்த 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் கல்விப்பொதுதராதர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், இம்முறை கல்லூரிகளில் ஒரே முறையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். ஆரம்ப கற்கை நெறி, தகவல் தொழில்நுட்ப விஞ்ஞானம், கணிதம் உள்ளிட்ட கற்கை நெறிகளுக்காக அதிகளவானோர் தெரிவுசெய்யப்படவுள்ளனர். இதேவேளை கல்வியற் கல்லூரிகளுக்கு ஒரே தடவையில் அதிகளவானோர் இணைத்துக்கொள்ளப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 21, 2019 11:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க