fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கிம் ஜொங் உன்-ட்ரம்ப் சந்திப்பு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 19, 2019 13:41

கிம் ஜொங் உன்-ட்ரம்ப் சந்திப்பு

பெப்ரவரி இறுதிக்குள் நடைபெறும் 2வது உச்சி மாநாட்டில் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்திக்க போவதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது.

முன்னதாக, வட கொரிய அரசின் பிரதிநிதி கிம் ஜாங்-சோல் அதிபர் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்த பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னிடம் இருந்து கொண்டு வந்த கடிதத்தை கிம் ஜாங்-சோல் டிரம்பிடம் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாட்டுக்கு பின்னர், அணு ஆயுத ஒழிப்பில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

புதிய உச்சி மாநாடு நடைபெறும் இடம் அறிவிக்கப்படவில்லை. வியட்நாமில் இது நடைபெறலாம் என்று அனுமானங்கள் நிலவுகின்றன.

கிம் ஜாங்-சோல் அமெரிக்கா சென்றிருப்பது பல மாதங்களாக வட கொரியாவோடு நடத்தி வரும் அணு ஆயுத ராஜதந்திரத் நகர்வின் முதல் அறிகுறி என்று பிபிசியின் செய்தியாளர் பார்பரா பிளேட் தெரிவித்திருக்கிறார்.

BBC

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 19, 2019 13:41

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க