fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புதிய அரசியல் யாப்பு-ஆலோசனைகள் பெறப்படுகிறது-அமைச்சர் லக்ஷ்மன்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 19, 2019 13:28

புதிய அரசியல் யாப்பு-ஆலோசனைகள் பெறப்படுகிறது-அமைச்சர் லக்ஷ்மன்

புதிய அரசியல் யாப்பு தொடர்பாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளில் சகல அரசியல் கட்சிகளினதும் சிவில் அமைப்புக்களினதும் ஆலோசனைகள் இடம்பெறுவதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒற்றையாட்சிக்கும், பௌத்த மதத்திற்கும் முதன்மைத்தானம் வழங்க தமிழ் அரசியல் கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்றினார்.

பாராளுமன்ற செயற்பாட்டின் மூலமே இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. வரலாற்றில் முதற்தடவையாக தமிழ் அரசியல் கட்சிகள் அரசியல் யாப்பை தயாரிக்கும் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அமைச்சர் கூறினார். ஒற்றையாட்சி என்ற கோட்பாட்டை தமிழ் கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளன. தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஒன்றையாட்சி என்ற சொல் பயன்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் அரசியல் யாப்புக்கு விளக்கம் அளிப்பதில் பிரச்சினைகள் ஏற்படமாட்டாது. சுதந்திரத்தின் பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜயவர்த்தன ஆகியோரின் காலத்தில் அரசியல் யாப்பை வரையும் பணிகளை தமிழ் கட்சிகள் பகிஷ்கரித்திருந்தன. ஆனால் தமிழ் கட்சிகள் இந்த செயற்பாடுகளுக்கு தற்சமயம் ஆதரவு வழங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியல் யாப்பில் ஒன்றையாட்சி, பௌத்த மதம் என்பனவற்றை நீக்க வேண்டும் என்று கூறிவந்த ஜி.எல்.பீரிஸ் போன்றவர்கள் இன்று மக்களுக்கு நேர்முரணான கருத்துக்களை முன்வைக்கின்றனர் என்று பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படும் கூற்றில் எந்தவித உண்மையும் கிடையாது என, அங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். மாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழுக்களை அமைப்பது பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேசிய காணி ஆணைக்குழுவிடமே காணி தொடர்பான அதிகாரங்கள் உள்ளதாகவும் என்றும் அமைச்சர் கூறினார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 19, 2019 13:28

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க