fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இவ்வருடம் இலங்கைக்கு வழங்கப்படும் ஹஜ் கோட்டாவை அதிகரிக்க சவூதி தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 18, 2019 10:53

இவ்வருடம் இலங்கைக்கு வழங்கப்படும் ஹஜ் கோட்டாவை அதிகரிக்க சவூதி தீர்மானம்

இவ்வருடம் இலங்கைக்கு வழங்கப்படும் ஹஜ் கோட்டாவை அதிகரிக்க சவூதி அரேபியா தீர்மானித்துள்ளது. இதற்கு முன்னர் ஹஜ் யாத்திரைக்கு இரண்டாயிரத்து 800 பேர் அனுமதிக்கப்பட்டனர். இம்முறை அது மூவாயிரத்து 500 ஆக அதிகரித்துள்ளதாக தபால் சேவைகள் மற்றும் இஸ்லாம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சவூதி அரேபிய ஹஜ் அலுவல்கள் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை ஹஜ் யாத்திரைக்காலம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மேலும் கோட்டாவை அதிகரிக்க கோரிக்கை விடுக்கப்படுமென அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 18, 2019 10:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க