fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

போதை பொருள் வர்த்தகத்தை ஒழிக்க மற்றுமொரு வேலைத்திட்டம் குறித்து ஜனாதிபதி பிலிபைன்ஸில் தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 18, 2019 13:46

போதை பொருள் வர்த்தகத்தை ஒழிக்க மற்றுமொரு வேலைத்திட்டம் குறித்து ஜனாதிபதி பிலிபைன்ஸில் தெரிவிப்பு

பெரும் சவாலாக காணப்படுகின்ற போதை பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் வேலைத்திட்டங்களை மேலும் பலப்படுத்தும் வகையில் மற்றுமொரு வேலைத்திட்டம் ஒன்றை அமுல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதனை ஜனவரி இறுதி பகுதியில் இருந்து அமுல்படுத்த போவதாக பிலிபைன்ஸில் உள்ள இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றும் போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பிலிபைன்ஸ் ஜனாதிபதியின் விசேட அழைப்பின் பேரில் அங்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிலிபைன்ஸில் வாழும் இலங்கையர்களை நேற்று மனிலா நகரில் சந்தித்துள்ளார். உயர் கல்வியை தொடரும் மாணவர்கள், தொழில்சார்ந்தோர் உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் தொடர்புடையவர்கள் இங்கு இணைந்திருந்தனர். இவர்கள் தமது பிரச்சினைகளையும் ஜனாதிபதியிடம் முன்வைத்தனர். பிலிபைன்ஸில் வாழும் இலங்கையர்களின் நலன்புரி விடயங்களுக்கு என பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க போவதாக ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார். உயர் கல்வி கற்கின்ற மாணவர்களின் பிரச்சினைகள் மற்றும் வீசா தொடர்பான பிரச்சினைகள் இதன்போது முன்வைக்கப்பட்டன. இந்த சகல பிரச்சினைகளையும் பிலிபைன்ஸூக்கான இலங்கை தூதுவரிடம் முன்வைக்குமாறு ஜனாபதிபதி ஆலோசனை வழங்கினார். பிலிபைன்ஸ் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இவற்றை தீர்த்துக்கொள்வதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுக்க போவதாகவும் ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார். போதை பொருள் வர்த்தகத்திற்கு எதிராக பிலிபைன்ஸ் ஜனாதிபதியினதும் அந்நாட்டு அரசாங்கத்தினதும் அர்ப்பணிப்பை ஜனாதிபதி பாராட்டினார். இலங்கைக்கும் பாரிய சவாலாக இப்போதை பொருள் வர்த்தகம் காணப்படுகின்றது. இதனை ஒழிப்பதற்காக தனது வழிக்காட்டலின் கீழ் அமுல்படுத்தப்பட்டுள்ள விரி;வான வேலைத்திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிலிபைன்ஸில் உள்ள இலங்கையர்களுக்கு விளக்கமளித்தார். இவ்விஜயத்தின் போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இலங்கை-பிலிபைன்ஸ் இருதரப்பு இணக்கப்பாடுகள் குறித்தும் இலங்கையர்களை அறிவுறுத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார். இவ்விணக்கப்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு உயர்ந்தபட்ச அர்ப்பணிப்புடன் செயற்பட போவதாக ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 18, 2019 13:46

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க