பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரின் தாக்குதலில், தலீபான் பயங்கரவாதிகள் நால்வர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் காஜி பம்ப் பகுதியில்; பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீடொன்றை பாதுகாப்பு பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது பயங்கரவாதிகள் பாதுகாப்பு பிரிவினரை இலக்கு வைத்து சரமாரியாக துப்பாக்கிப்பிரயோகம் நடத்தினர். அதற்கு பதிலடி வழங்கும் வகையில் பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்ட தாக்குதலில் பயங்கரவாதிகள் நால்வர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் படையினரின் தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் நால்வர் பலி
படிக்க 0 நிமிடங்கள்