6 கோடி ரூபா பெறுமதியான 5 கிலோ 24 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 53 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கொழும்பு கடுவெல கொத்தலாவல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
போதை ஒழிப்பு பிரிவினரே இவரை கைது செய்துள்ளனர்.கடுவெல நீதவான் நீதிமன்றில் குறித்த சந்தேக நபர் ஆஜர்படுத்தப்பபடவுள்ளதோடு இவரிடம் விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.