fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை மற்றும் பிலிபைன்ஸ் அரச தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று மாலையில்..

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 16, 2019 12:49

இலங்கை மற்றும் பிலிபைன்ஸ் அரச தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று மாலையில்..

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றுக்காக பிலிபைன்ஸ் நோக்கிச்சென்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. ஜனாதிபதிக்கும் பிலிபைன்ஸ் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று பேச்சுவார்த்தையும் இடம்பெறவுள்ளது. இலங்கைகும் பிலிபைன்ஸூக்கும் இடையில் 58 வருடகால இராஜதந்திர உறவுகள் நிலவுகின்றன. இருநாடுகளுக்கும் இடையில் காணப்படும் இராஜதந்திர உறவுகளில் இலங்கை அரச தலைவர் ஒருவருக்கு பிலிபைன்ஸில் இருந்து அழைப்பு கிடைத்த முதல் சந்தர்ப்பமாக இதுவென்பது விசேட அம்சமாகும். இவ்விஜயத்தை ஆரம்பிக்கும் வகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மனிலா நகரில் நினோய் அக்கினோ விமான நிலையத்தின் ஊடாக நேற்றிரவு பிலிபைன்ஸை சென்றடைந்தார். அங்கு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் பிலிபைன்ஸ் வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர் உள்ளிட்ட விசேட பிரதிநிதிகளினால் வரவேற்கப்பட்டனர். பிலிபைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடேர்ட்டேவுக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மலகன்யங் மாளிகையில் இன்று மாலை வேளையில் இடம்பெறவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு , கல்வி , விவசாயம் மற்றும் சுற்றுலா துறைகளில் புரிந்துணர்வை மேம்படுத்தும் ஒருசில உடன்படிக்கைகளிலும் இராஜதந்திரிகளின் சந்திப்பினையடுத்து கைச்சாத்திடப்படவுள்ளது. மனிலா நகரில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்திற்கும் லொஸ் வெனோஸில் அமைந்துள்ள அரிசி ஆய்வு நிலையத்திற்கும் ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தக்கே ஹிகோ நா கா ஓவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 16, 2019 12:49

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க