fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை மீனவர்களை பாதுகாக்க விரிவான வேலைத்திட்டம் : கடற்படை அறிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 15, 2019 14:08

இலங்கை மீனவர்களை பாதுகாக்க விரிவான வேலைத்திட்டம் : கடற்படை அறிவிப்பு

மீனவர்களின் பாதுகாப்புக்கென விரிவுப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென கடற்படை தெரிவித்துள்ளது. சட்டவிரோத மீன்பிடி தொழிலில் ஈடுபடும் இந்திய மீனவர்களினால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடந்த காலங்களில் இவ்வாறான பல்வேறு சம்பவங்கள் பதிவாகியிருந்தன. இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக உள்நுழையும் இந்திய மீனவர்களால், இலங்கை மீனவர்களின் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் பலவற்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. கடற்படைக்கு சொந்தமாக படகுகளுக்கும் சேதமேற்படுத்தி, இந்திய மீனவர்கள் தப்பிச்செல்ல முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது. அவ்வாறான சம்பவங்களை தடுக்கும் வகையில் துரித நடவடிக்கை எடுக்கப்படுமென கடற்படை தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 15, 2019 14:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க