fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் இன்று இனிய தைப்பொங்கல் தினத்தை கொண்டாடுகின்றனர்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 15, 2019 13:23

உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் இன்று இனிய தைப்பொங்கல் தினத்தை கொண்டாடுகின்றனர்

உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் இன்று இனிய தைப்பொங்கல் தினத்தை கொண்டாடுகின்றனர். உழவர்களின் திருநாளாக தைத்திருநாள் போற்றப்படுகிறது. உணவும் நீரும் தரும் கதிரவனை தெய்வமாக கருதி பகலவனுக்கு நன்றி சொல்ல தைத்திருநாள் கொண்டாடப்படுகிறது. சூரிய வழிபாட்டு பாரம்பரியம், தமிழர் வரலாற்றில் புராதன காலத்தில் தோன்றிய மரபாக காணப்படுகிறது. தமிழர்கள் தைப்பொங்கல் தினத்தில் பகலவனை தொழுது, புது வாழ்வை தொடங்கும் சம்பிரதாயத்தை கொண்டுள்ளனர். தைப்பொங்கல் தினத்தில் பால் பொங்கி, சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் பாரம்பரியத்துடன் தமிழர்களுக்கே உரித்தான கலாசார பாரம்பரிய சம்பிரதாய விளையாட்டுக்களும் நடத்தப்படும். தைப்பொங்கல் தமிழர்களின் திருநாளாகவும், உழவர்களின் பெருநாளாகவும் காணப்படுகிறது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 15, 2019 13:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க