உலக வங்கியின் அடுத்த தலைவருக்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கென உலகின் முன்னணி பெண்கள் இருவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகளான இவன்கா ட்ரம்ப் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவர் நிக்கி ஹெலி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. உலக வங்கியின் தற்போதைய தலைவர் ஜிம் யொங் கிம் தனது பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார். இதனையடுத்தே புதிய தலைவருக்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

உலக வங்கியின் அடுத்த தலைவருக்கான பரிந்துரையில் ட்ரம்பின் மகள்
படிக்க 0 நிமிடங்கள்