fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஈ ஹெல்த் அட்டையை விநியோகிக்கும் செயற்பாடு அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் : சுகாதார அமைச்சு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 14, 2019 13:37

ஈ ஹெல்த் அட்டையை விநியோகிக்கும் செயற்பாடு அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் : சுகாதார அமைச்சு

ஈ ஹெல்த் அட்டையை விநியோகிக்கும் செயற்பாடு அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் அனைத்து பிரஜைக்கும் ஈ ஹெல்த் அட்டையை பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக களுத்துறை பொது வைத்தியசாலை மற்றும் பண்டாரகம மாவட்ட வைத்தியசாலைகளை கேந்திரமாக கொண்டு ஈ ஹெல்த் அட்டை விநியோகிக்கப்படவுள்ளது. நோயாளியொருவரின் முழுமையான சுகாதார நிலை தொடர்பான தரவுகள் குறித்த அட்டையில் உள்ளடக்கப்படும். எந்தவொரு பிரதேசத்தை சேர்ந்த வைத்தியரும் நோயாளிக்கு உடனடியாக சிகிச்சையளிப்பதற்கும் ஈ ஹெல்த் அட்டை உதவியாக அமையுமென சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 14, 2019 13:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க