fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புதிய அரசியலமைப்புக்கான யோசனை ஒன்றே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் விளக்கம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 13, 2019 16:26

புதிய அரசியலமைப்புக்கான யோசனை ஒன்றே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் விளக்கம்

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு சட்டமூலமொன்று அல்லவென அரசாங்கம் தெரிவித்துள்ளது. புதிய அரசியலமைப்பு தொடர்பில் யோசனைகள் அடங்கிய அறிக்கையொன்றே சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்தார். அரசியலமைப்பை மாற்றுவதற்கான சட்டமூலமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து சில திரிவுபடுத்தப்பட்ட கருத்தக்களை பரப்புவதாக அவர் தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியாக குழப்பத்தை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கமாகும். இதேவேளை புதிய அரசியலமைப்பு தொடர்பில் நாட்டின் சகல தரப்பினரதும் கருத்துக்களை பெறம் நடவடிக்கை இடம்பெறுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். நாட்டை பிரித்தல் அல்லது பௌத்த மதத்திற்கு காணப்படும் இடத்தை இல்லாமல் செய்தல் போன்ற தேவைகள் அரசாங்கத்திற்கு இல்லையெனவும் பிரதமர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 13, 2019 16:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க