fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாய்களிலிருந்து மனிதனுக்கு தொற்றும் ‘ட்ரிபனசோமா’ நோய் குறித்து அவதானம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 13, 2019 14:43

நாய்களிலிருந்து மனிதனுக்கு தொற்றும் ‘ட்ரிபனசோமா’ நோய் குறித்து அவதானம்

‘ட்ரிபனசோமா’ நோய் குறித்து சுகாதார அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. குறித்த நோய் நாய்களிலிருந்து மனிதனுக்கு தொற்றுவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இவ்விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருவதுடன் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலுமுள்ள நாய்களின் இரத்தமாதிரிகள் தற்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய முல்லைத்தீவு பிரதேசத்திலுள்ள சில நாய்களின் கண்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த நோய் மனிதர்களுக்கு தொற்றுவது குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக மிருக வைத்திய பீடத்தின் பேராசிரியர் அசோக தன்கொல்ல தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த நோய்த் தொற்றினால் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் இல்லையென சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 13, 2019 14:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க