கண்டி நகரிலுள்ள உணவகமொன்றில் தீ பரவியுள்ளது. விலியம் கோபல்லவ மாவத்தையிலுள்ள உணவகமொன்றிலேயே தீச்சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த தீ தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உணவகத்திற்குள் இருந்த எரிவாயு சிலிண்டர் மற்றும் மர தளபாடங்களை ஊழியர்கள் வெளியில் எடுத்துவந்துள்ளனர். இதனால் ஏற்படவிருந்த பாரிய சேதம் தடுக்கப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டி நகரிலுள்ள உணவகமொன்றில் தீ
படிக்க 0 நிமிடங்கள்