ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிலிப்பைன்ஸுக்கு பயணிக்கவுள்ளார். 5 நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் அங்கு செல்லவுள்ளார். பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டர்டேயின் விசேட அழைப்பிற்கமைய ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் விஜயம் அமையவுள்ளது. அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாசார உறவுகளை கட்டியெழுப்புவது தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர். எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன பிலிப்பைன்ஸிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி தலைமையகத்திற்கும் மேற்பார்வை விஜயமொன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி பிலிப்பைன்ஸுக்கு விஜயம் செய்யவுள்ளார்
படிக்க 0 நிமிடங்கள்