fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எரிபொருள் விலை மீண்டும் குறைப்பு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 11, 2019 12:20

எரிபொருள் விலை மீண்டும் குறைப்பு

எரிபொருள் விலை நான்காவது முறையாகவும் குறைக்கப்பட்டுள்ளது. விலையை தீர்மானிக்கும் சூத்திரத்திற்கு அமைய நேற்று நள்ளிரவு முதல் விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய பெற்றோல் மற்றும் டீசல் ஒரு லீற்றர் 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலையை 125 ரூபாவிலிருந்து, 123 ரூபாவாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 149 ரூபாவிலிருந்து, 147 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. ஒட்டோ டீசல் ஒரு லீற்றர் 101 ரூபாவலிருந்து, 99 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது. சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலையை 3 ரூபாவால் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய 121 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட சுப்பர் டீசல் ஒரு லீற்றர் தற்போது 118 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 10ம் திகதி இடம்பெறும் எரிபொருள் விலை மறுசீரமைப்பின் கீழ் இம்முறை விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் போக்கு காணப்படுவதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து கச்சா எண்ணெய் தொடர்ந்தும் அதிகரித்து காணப்படுகிறது. நேற்றைய தினம் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 59 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளதாக அறிக்கையொன்றின் மூலம் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை குறைக்க இலங்கை ஐழுஊ நிறுவனம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தினால் எரிபொருள் விலை குறைப்புக்கு நிகராக ஐழுஊ நிறுவனமும் விலையை குறைத்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 11, 2019 12:20

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo