fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உயர் நீதிமன்ற நீதியரசராக மலையக தமிழர் ஒருவர் சத்தியப்பிரமாணம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 10, 2019 18:50

உயர் நீதிமன்ற நீதியரசராக மலையக தமிழர் ஒருவர் சத்தியப்பிரமாணம்

3 உயர் நீதிமன்ற நீதியரசர்களும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஒருவரும் நேற்று ஜனாதிபதி முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டனர். மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சிதம்பரபிள்ளை துரைராஜா உயர் நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு பெற்றார். இதன் மூலம் மலையக தமிழர் ஒருவர் உயர் நீதிமன்ற நீதியரசராக முதல் முறையாக சத்தியப்பிரமாணம் செய்து மலையக தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். புஸல்லாவ சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியை பயின்ற நீதியரசர் சிதம்பரபிள்ளை துரைராஜா கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் இடைநிலை கல்வியை பயின்றார். தொடர்ந்து அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டமாணி பட்டத்தை பெற்று 1988ம் ஆண்டு சட்டதரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். லண்டன் பல்கலைக்கழக்கத்தின் சட்ட முதுமாணி பட்டத்தையும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வர்த்தக தொழில்நுட்ப டிப்ளோமா பட்டத்தையும், மோல்டாவில் சர்வதேச பயங்கரவாத எதிர்பு நடவடிக்கை தொடர்பான சர்வதேச டிப்ளோமா பட்டத்தையும் அவர் பெற்று கொண்டார். பிஜி குடியரசு பெரிஸ்டராகவும், அரச தரப்பு சட்டதரணியாகவும் பணியாற்றிய இவர் 1989ம் ஆண்டு சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் இணைந்து கொண்டார். இதனை தொடர்ந்து 2007ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை பிரதி அரச தரப்பு சட்டவாதியாகவும் 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரை மேலதிக அரச தரப்பு சட்டதரணியாகவும் செயற்பட்டதுடன், அதே ஆண்டில் ஜனாதிபதி சட்டதரணியாகவும் நியமிக்கப்பட்டார். அத்துடன் சட்டக்கல்லூரி, கொழும்பு சட்டபீடம், திறந்த பல்கலைக்கழகம், பொலிஸ் பயிற்சி கல்லூரி, மதுவரி திணைக்களம் ஆகியவற்றில் விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். 2016ம் ஆண்டு செப்டம்பர் 14ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக அவர் ஜனாதிபதியினால் நியமிப்பட்டார். இதன்மூலம் மலையக தமிழர் ஒருவர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டதுடன், நேற்று அவர் உயர் நீதிமன்ற நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்து மலையக தமிழர்களுக்கு மேலும் பெருமை சேர்த்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 10, 2019 18:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க