fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இவ்வாண்டுக்கான IPL தொடர் இந்தியாவில்..

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 10, 2019 16:56

இவ்வாண்டுக்கான IPL தொடர் இந்தியாவில்..

இவ்வாண்டுக்கான ஐபிஎல் தொடர் இந்தியாவிலேயே நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 11 தொடர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், இவ்வருடம் 12வது தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளது. இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை இவ்வாண்டு அங்கு நடாத்துவது தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. எனினும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடர் இந்தியாவிலேயே நடத்தப்படுமென்பதை உறுதிசெய்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மத்திய அரசின் அதிகாரிகளுடன் விசேட பேச்சுவார்த்தையொன்றும் இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 23ம் திகதி போட்டித்தொடர் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 10, 2019 16:56

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க