fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஒருதொகை சட்டவிரோத பொருட்களை இந்தியாவிலிருந்து எடுத்துவந்த 6 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 10, 2019 16:21

ஒருதொகை சட்டவிரோத பொருட்களை இந்தியாவிலிருந்து எடுத்துவந்த 6 பேர் கைது

ஒருதொகை சட்டவிரோத பொருட்களை இந்தியாவிலிருந்து எடுத்துவந்த 6 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களென தெரியவந்துள்ளது. சந்தேக நபர்களின் பயணப்பையை சோதனையிட்டபோது, அதிலிருந்து 10 இலட்சம் ரூபா பெறுமதியான வாசனைத்திரவியங்கள் மற்றும் அழகுசாதனப்பொருட்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளன. தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் அனுமதியின்றி அவர்கள் அவற்றை நாட்டுக்கு எடுத்துவந்துள்ளதாக விமான நிலைய சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேக நபர்களிடமிருந்து சிகரெட்டுக்கள் மற்றும் புகைப்பொருள் பெட்டிகள் சிலவும் கைப்பற்றப்பட்டதாக விமான நிலைய சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 10, 2019 16:21

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க