`வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் நடிக்கும் சிம்பு, அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் `மாநாடு’ படத்தில் நடிக்க இருக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 3-ஆம் திகதி துவங்கவிருக்கிறது. படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிககைகள் தேர்வு தீவிரமாக நடந்து வரும் நிலையில், சிம்பு ஜோடியாக நடிக்க ராஷி கண்ணா ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.