fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் இம்மாதம் முதல் அதிகரிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 9, 2019 15:45

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் இம்மாதம் முதல் அதிகரிப்பு

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் இம்மாதம் முதல் அதிகரிக்குமென நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இரண்டாயிரத்து 500 ரூபா முதல், 10 ஆயிரம் ரூபா வரை சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும். கடந்த 2015ம் ஆண்டு அரச ஊழியளர்களுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டது. 2016ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை கொடுப்பனவை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய 2015ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2020ம் அரச ஊழியர்களின் சம்பளம் 107 வீதத்தால் அதிகரிக்குமென நிதியமைச்சு தெரிவித்துள்ளது. வரலாற்றில் இவ்வாறான சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்ட முதற்சந்தர்ப்பம் இதுவாகும். அரச ஊழியர் ஒருவரின் அடிப்படை சம்பளம் 2020ம் ஆண்டளவில் இரண்டாயிரத்து 500 ரூபா முதல், 10 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்குமென நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 9, 2019 15:45

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo