fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விபத்தில் 3 இளைஞர்கள் பலி

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 9, 2019 15:01

விபத்தில் 3 இளைஞர்கள் பலி

கிளிநொச்சி பளை இயக்கச்சி பிரதான சந்தியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

பளை ஏ-9 வீதியில் இயக்கச்சி பிரதான சந்தியில் விபத்து இடம்பெற்றது. முச்சக்கரவண்டியொன்றும் இராணுவ டிரக் வண்டியொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஏற்பட்ட விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் மேலும் இரண்டு இளைஞர்களும் உயிரிழந்தனர். பளை சுழிப்புரம் ஆகிய பகுதிகளில் வசித்து வந்த இளைஞர்களே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர். விபத்து தொடர்பில் இராணுவ ட்ரக்கின் சாரதி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஸ்யால கிரிஉல்ல பிரதான வீதியின் கல்எலிய கல்அமுன பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். டிப்பர் வண்டியொன்றும் முச்சக்கரவண்டியொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் முச்சக்கர வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த முச்சக்கரவண்டியின் சாரதி மீகஸ்தென்ன பகுதியை சேர்ந்த 50 வயதான நபராவார். மீரிகம பொலிசார் இவ்விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கினிகத்ஹேன லக்ஷபான வீதியில் கொள்கலன் வண்டியொன்று தடம் புரண்டதில் அப்பகுதியில் போக்குவரத்து தடையேற்பட்டது. கொழும்பு துறைமுகத்தில் இருந்து கினிகத்ஹேன பொல்பிடிய பகுதிக்கு இரும்புகளை ஏற்றிச்சென்ற கொள்கலன் ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளானது. இவ்விபத்தினால் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை. குறித்த கொள்கலன் வண்டி வளைவு ஒன்றி;ல் திரும்ப முயன்ற போது இவ்வாறு விபத்திற்குள்ளானதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 9, 2019 15:01

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க