fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜனாதிபதி பதவியேற்று 4 வருடங்கள் பூர்த்தி

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 9, 2019 14:58

ஜனாதிபதி பதவியேற்று 4 வருடங்கள் பூர்த்தி

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியடைகின்றன. ஜனாதிபதி பதவியேற்ற தினத்தன்றே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் புதிய அமைச்சரவையும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது.

2015ம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி இடம்பெற்ற இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் 62 இலட்சத்திற்கும் கூடுதலான மக்கள் வாக்களித்ததன் மூலம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். 2015ம் ஆணடு ஜனவரி 9ம் திகதி அவர் இலங்கையின் ஆறாவது நிறைவேற்று ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்தார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன 40 வருடங்களுக்கு மேல் அரசியலில் ஈடுபட்டு வரும் அனுபவம் மிக்க அரசியல் தலைவர் ஆவார். இக்காலத்தில் அவர் ஸ்ரீலசுகவின் பொதுச்செயலாளராகவும் அமைச்சராகவும் பிரதியமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சமூகத்தில் மிகவும் மதிப்புமிக்க அரசியல்வாதியாக கருதப்படுகின்றார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 9, 2019 14:58

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க