Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கடந்த 4 வருடங்களில் அரசாங்கம் பல வெற்றிகளை கண்டுள்ளது-அமைச்சர் அஜித்

shukrymjm
By shukrymjm ஜனவரி 9, 2019 10:46

கடந்த 4 வருடங்களில் அரசாங்கம் பல வெற்றிகளை கண்டுள்ளது-அமைச்சர் அஜித்

கடந்த நான்கு வருடங்களில்  அரசாங்கம், இராஜதந்திரரீதியில் பல வெற்றிகளை பெற்றுக்கொண்டுள்ளது என்று அமைச்சர் அஜித்பிபெரேரா தொவித்தார்

தூதுவர்களின் வரப்பிரசாத சட்டமூலம் தொடர்பானவிவாதம் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய அமைச்சர் அஜித்பிபெரேரா நாட்டின்பிரச்சனைகளை தீர்ப்பதற் குரிய ஆற்றலும், சக்தியும் அரசாங்கத்திற்கு இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

தூதுவர்கள் தனிநபர்களுக்காக அன்றி நாட்டிற்காக செயல்பட வேண்டும். இராஜதந்திர பதவிகளுக்கு தகுதியற்றவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
வெளிநாட்டவர்களின் வருகையை அதிகரிப்பதற்காக சேவை செய்யும் தூதுவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்கவேண்டுமென வெளிவிவகார அமைச்சர்திலக்மாரப்பன .சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த உரையாற்றினார்.

நாட்டின் சுயாதீனத்தை பாதுகாத்து சர்வதேச தொடர்புகளை கட்டியெழுப்ப வேண்டும் சில தூதுவர்கள் தமது அதிகாரத்துக்கும் மீறிய சில செயற்பாடுகளை மேற்கொள்வதையும் எம்மால் காணக்கூடியதாக இருக்கிறது. கலரியைப் பார்வையிட வந்த சில தூதுவர்கள் கைத் தட்டுவதைக் காணக்கூடியதாக இருந்தது. இவர்களை நிர்வகிப்பது யார் என்ற கேள்வி எழுகிறது? தூதுவர்களுக்கு சுதந்திரமாக செயற்பட அனுமதி இருக்கிறது.ஆனால், எமது நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு செயற்பட வேண்டும் மென பாராளுமன்றஉறுப்பினர் அனுரபிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

உலகிலேயே பயங்கரமான அமைப்புடன் தான் நாம் போரிட்டோம். இவ்வாறான அமைப்புடன் பரிடிடும்போது, மனித உரிமை மீறப்படும். மனித உரிமை மீறப்படாமல், இவ்வாறான ஒரு பயங்கரவாத அமைப்புடன் எம்மால் போரிட முடியாது என்பது அனைவருக்கும் தெரியும் என்று. பாராளுமன்றஉறுப்பினர் அருந்திக பெர்னான்டோ தெரிவித்தார்
தலைமன்னாரிலிருந்து இராமேஸ்வரம்வரையில் கப்பல்சேவையை மீண்டும் ஆரம்பிக்கவேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர்டக்லஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
வெளிநாட்டுதூதுவர்களின் சேவைக்கு இராஜதந்திரரீதியிலான கௌரவமும் , பாதுகாப்பும் வழங்குவதற்குஏற்ப, அவர்களின் செயற்பாடும் அமையவேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர்சிட்னி ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உரையாற்றுகையில் ,இராணுவத்தை சர்வதேசத்திடமிருந்து காப்பாற்றிவிட்டதாக கூறிக்கொண்டிருக்கிறார்கள். இன்று நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் கூட தனிப்பட்டத் தேவைக்கு இணங்கவே நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஏன்று தெரிவித்தார்.

shukrymjm
By shukrymjm ஜனவரி 9, 2019 10:46
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க