ஊடகவியலாளர் லசன்த விக்ரமதுங்கவின் பத்தாவது நினைவு தின நிகழ்வு நேற்றைய தினம் பொரளை கனத்தையில் இடம்பெற்றது.. நினைவஞ்சலி கூட்டத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
ஊடகவியலளர்களுக்கு சுதந்திரமாக தமது நடவடிக்கைகளை புரிய கூடியதாகவுள்ளதோடு பேனாவுக்கும் மீண்டும் சரியான இடம் கிடைத்துள்ளது.
மிகவும் நியாயமான, வெளிப்படையான ஊடகக் கலை இன்று நாட்டில் உருவாகியுள்ளது லசன்த விக்ரமதுங்க போன்ற ஊடகவியலாளர்களை கொலை செய்யாத சமூகமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. லசன்த, கொலை தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றார்கள். வெகுவிரைவில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர மேலம் தெரிவித்தார்.