fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வடகொரிய தலைவர் சீனாவுக்கு விஜயம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 8, 2019 15:10

வடகொரிய தலைவர் சீனாவுக்கு விஜயம்

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். சீன ஜனாதிபதி சீ ஜிங் பின்னின் அழைப்பின் பெயரில் சீனாவுக்கு வடகொரிய தலைவர் விஜயம் செய்துள்ளதாக வடகொரிய மற்றும் சீன ஊடகங்கள் அறிவித்துள்ளன. வடகொரிய தலைவரின் மனைவியான ரீ சோ ஜூ மற்றும் வட கொரியாவின் விசேட பிரதிநிதிகள் பலரும் இவ்விஜயத்தில் இணைந்துள்ளனர். இவர்கள் எதிர்வரும் 10 ம் திகதி வரை சீனாவில் தங்கியிருப்பார்கள். வடகொரிய தவைலர் மற்றும் அவரது பாரியார் தனியார் புகையிரதமொன்றில் சீனாவின் பீ ஜிங் நகரிற்கு வருகை தந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் தங்கவுள்ள இம்மூன்று நாட்களுக்குள் இராஜதந்திர உறவுகள், வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் உதவிகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது. வடகொரிய தலைவர் , சீன ஜனாதிபதி சீ ஜிங் பிங்கை சந்திக்கின்ற நான்கவது சந்தர்ப்பம் இதுவாகும். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் வடகொரிய தலைவருக்கும் இடையிலான இரண்டாவது மாநாட்டை நடத்துவதற்காக பேச்சுவார்த்தை நடைபெறும் இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறு வடகொரிய தலைவர் சீனாவுக்கு வருகை தந்துள்ளமை விசேட அம்சமாகும். கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்க ஜனாதிபதியை சந்திப்பதற்கு முன்னர் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் சீன ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 8, 2019 15:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க