பாராளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஒன்றுகூடியது . இவ்வாண்டில் இடம்பெறும் முதலாவது அமர்வில் எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் சபாநாயகரின் விசேட அறிவிப்பு உட்பட பல முக்கிய அறிவிப்புக்கள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இராஜதந்திர சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழ் கட்டளைகளை அங்கீகரிப்பதற்கான சட்டமூலமும், இரசாயன ஆயுதங்கள் சமவாய சட்டமூலமும் இன்றையதினம் பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.