மலேசிய மன்னர் 5ம் மொஹமது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அந்நாட்டு அரசியலமைப்புக்கமைய அனைத்து அதிகாரங்களையும் மன்னர் அரச தலைவருக்கு வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானியாவிலிருந்து சுதந்திரம் பெற்று 60 வருடங்களின் பின், மலேசிய மன்னரொருவர் பதவியை ராஜினாமா செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் மன்னரின் பதவிலகலுக்கான காரணம் என்னவென்பது குறித்து இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ரஸ்ய நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவரை திருமணம் செய்துள்ள 47 வயதான மலேசிய மன்னரின் பதவிவிலகலுக்கு விடயங்களே காரணமாக இருக்கலாமென ஒருசில ஊடகங்கள் செய்தி வெளிpயட்டுள்ளன.

மலேசிய மன்னர் 5ம் மொஹமது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்
படிக்க 0 நிமிடங்கள்