fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜனாதிபதியின் மனோநிலை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு விசாரணைக்கு எடுக்கப்படாமையிலேயே தள்ளுப்படி

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 7, 2019 12:59

ஜனாதிபதியின் மனோநிலை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு விசாரணைக்கு எடுக்கப்படாமையிலேயே தள்ளுப்படி

ஜனாதிபதியின் மனோநிலை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு விசாரணைக்கு எடுக்கப்படாமையிலேயே மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று தள்ளுப்படி செய்யப்பட்டது. ஜனாதிபதிக்கும் நாட்டுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதே மனுதாரரின் நோக்கமென மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. கொழும்பு 12ஐ சேர்ந்த தக்ஷிலா லக்மாலி எனும் பெண் ஒருவரே குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார். போதிய ஆதாரங்கள் மற்றம் சட்ட அடிப்படையற்ற வகையில் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் மனுவை தாக்கல் செய்த மனுதாரர் ஒரு இலட்சம் ரூபாவை வழக்குக்கான செலவு தொகையாக அரசாங்கத்திற்கு செலுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. மனுதாரர் ஜனாதிபதிக்கு அவமானத்தை ஏற்படுத்துவதற்கும், நாட்டுக்கும் அபகீர்த்தியை உருவாக்கும் நோக்கிலும் குறித்த மனுவை தாக்கல் செய்திருப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. மனநோய் தொடர்பான சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டுமானால் பொலிஸ் நிலையத்தில் மனநோய் தொடர்பில் முறையிட வேண்டும். ஆனால் மனுதாரரின் மனுவில் இதற்கான அறிக்கைகள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லையென மேன்முறையீட்டு நீதிமன்றம் மேலும் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 7, 2019 12:59

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க