சுகாதார வசதியற்ற பாடசாலைகளுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க நிதி ஒதுக்கீடு
Related Articles
சுகாதார வசதியற்ற அனைத்து பாடசாலைகளுக்கும் இவ்வருடத்திற்குள் உரிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாடு பலதுறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ள போதும் மலசலகூட வசதியற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குறித்த பாடசாலைகளுக்கு இவ்வருட இறுதிக்குள் சுகாதார கட்டமைப்பை ஏற்படுத்த நிதியொதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை 2020ம் ஆண்டளவில் இலங்கையில் எந்தவொரு எந்தவொரு பகுதியிலும் ஓலை குடிசைகள் இருகாதெனவும் அவர்களுக்கும் புதிய வீடுகள் அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.