fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்றின் மீது தாக்குதல்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 4, 2019 16:37

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்றின் மீது தாக்குதல்

கொழும்பிலிருந்து, வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்றின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த இருவர் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆராச்சிக்கட்டுவ ஹேன்யாய பிரதேசத்தில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதல் நடத்திய நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. கடந்த சில மாதங்களாக தூர சேவையில் ஈடுபடும் பஸ் வண்டிகள் பலவற்றின் மீது ஆராச்சிக்கட்டுவ மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில வைத்து தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 4, 2019 16:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க