fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான தேசிய தினம் இன்று

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 4, 2019 13:19

சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான தேசிய தினம் இன்று

சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான தேசிய தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. வருடந்தோறும் ஜனவரி 4ம் திகதி சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான தேசிய தினம் அனுஷ்டிப்படுகின்றது. சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக செயற்படுதல், சிறுவர் உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் சிறுவர்களுக்கு பாதுகாப்பான சூழல் ஒன்றை கட்டியெழுப்புதல் போன்ற நோக்கங்களை அடிப்படையாக கொண்டு இத்தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. அனைத்து சிறுவர்களையும் துஷ்பிரயோகங்களிலிருந்து பாதுகாத்து அவர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலமொன்றை ஏற்படுத்திக்கொடுப்பதற்காக சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டுமென தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் எச்.எம்.அபேரத்ன தெரிவித்துள்ளார். சிறுவர்களை சிறந்த முறையில் வழிநடாத்தும் பாரிய பொறுப்பு பெற்றோரை சாரும். அத்துடன் நாளைய உலகை பொறுப்பேற்கவுள்ள சிறுவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பது சமூகத்திலுள்ள வயது வந்தவர்களின் பொறுப்பாகுமென தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வலியுறுத்தியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 4, 2019 13:19

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க