கடற்பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடிய வளிமண்டலவியல் சூழல் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மன்னார் முதல் புத்தளம், கொழும்பு ஊடான களுத்துறை வரையான கடற்பகுதிகளில் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசும். இதனால் மீனவர்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென கடமையிலிருந்த வானிலையாளர் மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இதேவேளை வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்தும் குளிருடன் கூடிய காலநிலை நீடிக்கும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழைக்கான சாத்தியம் இல்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.

கடற்பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
படிக்க 0 நிமிடங்கள்