fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் புத்தாண்டு வாழ்த்து செய்தி

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 1, 2019 14:47

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் புத்தாண்டு வாழ்த்து செய்தி

ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி

புத்தாண்டு பிறப்பினை அண்மித்த காலமானது நாம் கடந்து வந்த காலத்தில் எமது வாழ்க்கையில் முகங்கொடுக்க நேர்ந்த வெற்றிதோல்விகளை பற்றியும் நிறைகுறைகளைப் பற்றியும் மீட்டிப்பார்ப்பதற்கான சிறந்த தருணமென ஜனாதிபதி விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துசெய்தியில் குறிப்பிட்டுள்ளார்.  எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைக்கும் கடந்த காலத்தை மீண்டும் மீட்டிப்பார்ப்பதன் மூலமே மனிதன் தனது பாதையில் இன்னல்கள் அற்ற வளமான பலன்களைப்பெறக்கூடியதாக அமைத்துக்கொள்கிறான். அவ்வாறே கடந்த வருடத்தின் தனது அனுபவங்களிலிருந்து கற்கவேண்டிய பாடங்களை கற்று அவற்றை சீர்தூக்கிபார்ப்பதன் மூலமே புதிய எதிர்பார்ப்புக்களை யதார்த்தமாக்கி கொள்ள முடியும். பண்டைய பாரிய நீர்ப்பாசன படைப்புக்களை கொண்டிருக்கும் இந்த நாட்டின் வரலாற்று மரபுரிமைகளை பற்றி பெருமிதம் கொள்வதோடு நின்று விடாது வரலாற்றை சீர்தூக்கிப்பார்த்தன் பலனாகவே அத்தகைய தனிச்சிறப்பு மிக்க நீர்ப்பாசன படைப்புக்களை புதிய வியாக்கியானத்தை பெற்றுக்கொள்ள எம்மால் முடிந்தது. கடந்த காலத்தில் கைநழுவிய வாய்ப்புகளை அறிந்து அதன் மூலம் புத்தம் புது வழிகளை நோக்கி எம்மை இட்டுச்செல்லக்கூடிய வரலாற்றின் மிக முக்கியமான காலப்பகுதியே இன்று மலர்கிறது. மலரும் 2019 ம் ஆண்டு ஒழுக்கம், நல்லிணக்கம் மற்றும் சுபீட்சம் ஆகியவற்றை அடையக்கூடிய பரந்த பாதையில் முன்பை விட கூடுதல் கரிசனையுடனும் கவனத்துடனும் அடையாளம் காணவேண்டிய உறுதிப்பாட்டை கொண்டதாகவே இந்த புத்தாண்டு அமைகின்றதென ஜனாதிபதி தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.


பிரதமரின் புத்தாண்டு வாழ்த்து செய்தி

பிறந்திருக்கும் புது வருடம் அனைத்து இலங்கை மக்களுக்கும் சவால் மிகுந்த ஒரு வருடமாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாடும் நாட்டு மக்களும் புதிய நோக்கங்களுடன் திடசங்கற்பம் பூண்ட புது யுகத்தின் உதயமாகவே 2019 புது வருடம் பிறக்கிறது. புது வருடத்தினை அமோகமாக வரவேற்கத் தயாராகும் அனைத்து இலங்கை மக்களுக்கும் முதலில் எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த வருடம் எதிர்நோக்கிய பாரிய சவால்களை முறியடித்து, மக்கள் இறைமையை உறுதிப்படுத்தியவாறு புது வருடத்தை வரவேற்க முடிகின்றமை நாமனைவரும் பெற்றுக்கொண்ட வெற்றியாகும். இன, மத, கட்சி பேதமின்றி ஜனநாயகத்தை வெற்றி பெறச் செய்வதற்காக அணிதிரண்ட உங்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் எனது கௌரவபூர்மான நன்றிகளைத் தெரிவிக்கிறேன். அதிகார வெறி கொண்ட அரசியல் சூழ்நிலையில் கடுமையான சிரமங்கள் மத்தியில்கூட எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சில வருடங்களில் நாம் சமூக, அரசியல் சீர்திருத்தங்கள் பலவற்றை மேற்கொண்டோம். நாகரீகமான, நீதி நியாயம் மிக்க சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு நாம் மேற்கொண்ட அந்த நடவடிக்கைகள் எமக்கு பலத்தினையும் துணிச்சலினையும் வழங்கியமையினால் நாம் அரசியலமைப்புக்கு முரணான சூழ்ச்சியைத் தோல்விடையச் செய்தோம்.

பிறந்திருக்கும் புது வருடம் அனைத்து இலங்கை மக்களுக்கும் சவால் மிகுந்த ஒரு வருடமாகும். நாம் பெற்றுக்கொண்ட ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தி, எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் சிறந்த சமூகமொன்றைக் கட்டியெழுப்பும் பொறுப்பு நமது முன்பாக உள்ளது. அதற்காக உளப்பூர்வமாகவும், முறையாகவும், உற்சாகத்துடனும் அணிதிரளுமாறு இந்தப் புது வருடத்தில் உங்களனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 1, 2019 14:47

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க