போதைப்பொருள் சந்தேக நபர்களை விசாரணை செய்ய இலங்கை பொலிஸ் குழு பங்களாதேஷிற்கு பயணம் 0
இலங்கை பொலிஸ் குழுவொன்று பங்களாதேஷிற்கு செல்லவுள்ளது. அங்கு கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தும் நடவடிக்கையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை விசாரணை செய்ய குறித்த குழு செல்லவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்கான அனுமதி கிடைத்தவுடன் குழு அங்கு செல்லவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.