fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு இழப்பீடு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 31, 2018 09:32

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு இழப்பீடு

வடக்கில் ஏற்பட்ட வெள்ள நிலமை குறைவடைந்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள நிலமை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டமே வெள்ளத்தினால் அதிக பாதிப்புக்களை எதிர்கொண்டது. இந்நிலையில் சீரற்ற காலநிலை காரணமாக வடக்கில் இடம்பெயர்ந்தவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை வெள்ளத்தினால் பாதிப்பை எதிர்கொண்ட விளைச்சல் நிலங்களுக்கு இழப்பீடு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஒரு ஏக்கர் நிலத்திற்கு 40 ஆயிரம் ரூபா வீதம் இழப்பீடு வழங்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் வெள்ளத்தினால் சேதமடைந்த வீடுகளை மீள நிர்மாணிப்பதற்கு முதல் கட்டமாக 10 ஆயிரம் ரூபா இழப்பீடு தொகை வழங்கப்படும். மதிப்பீடுகளின் பின்னர் அடுத்த கட்ட நிவாரண உதவி வழங்கப்படுமென அனர்த்த முகாமைத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை வடக்கில் வெள்ள அனர்த்தத்திற்கு முகம் கொடுத்தவர்களிடமிருந்து நுண்கடன்களை அறவிடுவதை நிறுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். இதுதொடர்பில் வங்கிகளிடம் கலந்துரையாடி எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இந்நிலையில் வடக்கு மக்களுக்காக நிவாரணப் பொருட்களுடன் விசேட ரயிலொன்று நாளை  கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படவுள்ளது. கிளிநொச்சியை குறித்த ரயில் சென்றடையவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க இதன்மூலம் பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கப்பெறவுள்ளது. அதற்கமைய ராகம, கம்பஹா, வெயங்கொட, மீரிகம, பொல்கஹவெல, குருநாகல், கணேவத்த, மஹவ, கல்கமுவ மற்றும் அனுராதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் மக்கள் தமது நிவாரணப் பொருட்களை வழங்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 31, 2018 09:32

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க