வடக்கில் மேலும் ஆயிரத்து 99 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனைக்கமைய காணி விடுவிப்பு முன்னெடுக்கப்படும். தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இடம்பெறும் காணி விடுவிப்பு முறைக்கமைய குறித்த செயற்பாடு இடம்பெறும். அரசாங்கத்திற்கு சொந்தமான ஆயிரத்து 99 ஏக்கர் காணியில் ராணுவத்தினரால் விவசாய பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறித்த காணிகள் பயனாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. கிளிநொச்சி முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் காணப்படும் காணிகள் ஜனவரி மாதம் 2 ம் வாரத்தில் விடுவிக்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆயிரத்து 99 ஏக்கர் காணியை விடுவிக்க நடவடிக்கை
படிக்க 0 நிமிடங்கள்