fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உயர்தர பரீட்சையில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 30, 2018 08:08

உயர்தர பரீட்சையில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரம்

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. தேசிய ரீதியில் முதல் இடம்பிடித்த மாணவர்களின் விபரங்களை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதற்கமைய இம்முறை உயிரியல் விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் கம்பஹா ரத்னாவலி மகளிர் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த கலனி சமுத்ரா ராஜபக்ஷ முதலிடம் பெற்றுள்ளார். இரண்டாம் இடம் கொழும்பு டீ.எஸ் சேனாநாயக்கவில் கல்வி கற்ற ரவீந்து ஷஷிகவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. மூன்றாம் இடத்தை மாத்தளை ஸாஹீரா கல்லூரியில் கற்ற ஹகீம் கரீம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் வர்த்தகப் பிரிவில் முதலாம் இடத்தை குருநாகல் மலியதேவ வித்தியாலயத்தைச் சேர்ந்த கசுன் விக்கிரமரத்ன பெற்றுள்ளதுடன் இரண்டாம் இடத்தை கம்பஹா ரத்னாவெலி மகளிர் பாடசாலையின் உச்சினி ரணவீர பெற்றுள்ளார். கொழும்பு மியுசியஸ் கல்லூரியின் மலிதி ஜயரட்ன வர்த்தகப்பிரிவில் 3 ம் இடத்தை பெற்றுள்ளார்.

இதேவேளை கலைப்பிரிவின் முதலாம் இடத்தை பாணந்துறை லைசியம் சர்வதேச பாடசாலையின் சேனதி அல்விசும் இரண்டாம் இடத்தை குருநாகல் மலியதேவ வித்தியாலயத்தின் சித்துமினி எதிரி சிங்க பெற்றுள்ளதுடன் மூன்றாம் இடத்தை கண்டி மஹாமயா மகளிர் பாடசாலையின் இஷானி உமேஷா பெற்றுள்ளார்.
இந்நிலையில் கொழும்பு ஆனந்த கல்லூரியில் கல்வி கற்ற யஷாஸ் பத்திரன மற்றும் தரிந்து ஏஷான் ஆகியோர் பொறியியல் தொழிநுட்ப பிரிவில் முதலாம் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். நிகவரெட்டிய மகாசேன் கல்லூரியின் சேஷான் ரங்கண குறித்த பிரிவில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.

உயர்தர தொழிநுட்ப பிரிவில் முதலாம் இடத்தை கமுறுபிட்டிய நாரந்தெனிய வித்தியாலயத்தின் சந்துனி கொடிபிலி பெற்றுக்கொண்டுள்ளார். சம்மாந்துறை முஸ்லிம் மகாவித்தியாலத்தின் ரிஷா மொஹமட் இரண்டாம் இடத்தையும் ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தின் விசிந்து லக்மால் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பெறுபேறுகளை  www.doenets.lk என்ற இணையதளத்தில் பார்வையிட முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். இம்முறை உயிரியல் பாடப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் கம்பஹா ரத்னாவலி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த கலனி சமுத்ரா ராஜபக்ஷ முதலிடம் பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தை கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க மற்றும் மாத்தளை சஹிரா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெற்றுள்ளனர். இதேவேளை கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் 3 இலட்சத்து 21 ஆயிரத்து 469 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 30, 2018 08:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க