இலங்கை எதிர் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி கிரைஸ் சேர்ச்சில் நடைபெற்று வருகிறது.நாணய சுழலில் வென்ற இலங்கை நியூஸிலாச்து அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.அதற்கிணங்க களமிறங்கிய அவ்வணி தனது முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 178 ஓட்டஙக்ளை பெற்றுக்கொண்டது.டிம் சவுதி அதிகபட்சமாக 68 ஓட்டங்களை பெற்றார்.பந்துவீச்சில் சுரங்க லக்மால் 5 விக்கட்டுக்களையும் லஹிரு குமார 3 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்.
அதனை தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்சில் துடப்பாடிய இலங்கை அணி துரதிஷ்டவசமாக 104 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.எஞ்சலோ மெத்தியூஸ் மாத்திரம் ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.பந்து வீச்சில் ட்ரென்ட் பவ்ல்ட் 6 விக்கட்டுக்களையும் டிம் சவுதி 3 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்.
அதன் பின்னர் 74 ஓட்டங்கள்முன்னிலையிலிருந்து களமிறங்கிய நியூஸிலாந்து அணி 4 விக்கட்டுக்களை இழந்திருந்த நிலையில் 585 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.டொம் லெதம் 176 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததோடு ஹென்றி நிக்கல்ஸ் ஆட்டமிழக்காமல் 162 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.லஹிரு குமார 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.660 எனும் இமாலய வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கியுள்ள இலஙடகை அணி 6 விக்கட்டுக்களை இழந்து 231 ஓட்டங்களை பெற்றுள்ளது.குசால் மெண்டிஸ் 67 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.4 விக்கட்டுக்களும் ஒருநாளும் இலங்கை அணிடம் கைவசமுள்ளது.