fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க புதிய வேலைத்திட்டம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 29, 2018 14:14

ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க புதிய வேலைத்திட்டம்

ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க புதிய வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் 35 ஆயிரம் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக கணிப்பிடப்பட்டுள்ளது. விஞ்ஞானம், கணிதம் மற்றும் தொழில்நுட்ப பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை அதிகளவில் காணப்படுகிறது. ஆங்கிலம், அழகியல் உள்ளிட்ட கலைசார் பாடவிதானங்களுக்கு மேலதிக ஆசிரியர்கள் காணப்படுகின்றனர். குறித்த மேலதிக ஆசிரியர்களை, ஆசிரியர் பற்றாக்குறை காணப்படும் பாடசாலைகளில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 29, 2018 14:14

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க