fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உயர்தர பரீட்சை பெறுபேறு இன்று இரவு வெளியிடப்படும் : பரீட்சைகள் ஆணையாளர்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 29, 2018 14:08

உயர்தர பரீட்சை பெறுபேறு இன்று இரவு வெளியிடப்படும் : பரீட்சைகள் ஆணையாளர்

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். பெறுபேறுகளை முதலில் இணையத்தளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பெறுபேறுகளை பார்வையிடமுடியும். நாளைய தினம் கொழும்பை சூழவுள்ள வலய பாடசாலைகளுக்கு பெறுபேறுகள் வழங்கப்படும். வெளி மாகாணங்களுக்கான பெறுபெறுகளை விரைவில் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத்தரதர உயர்தர பரீட்சையில் 3 இலட்சத்து 21 ஆயிரத்து 469 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 29, 2018 14:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க