கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் இந்த மாத இறுதி அல்லது அடுத்தமாதத்தின் முதல் வாரத்தில் வெளியிடப்படுமென பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதிஆணையாளர் எஸ்.பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தற்சமயம் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெரும்பாலும் இந்த மாத இறுதிக்கு முன்னர்பெறுபேறுகளை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.