fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வடக்கில் அனர்த்த நிலை நீங்கியது : நாளை முதல் காலநிலையிலும் மாற்றம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 27, 2018 13:31

வடக்கில் அனர்த்த நிலை நீங்கியது : நாளை முதல் காலநிலையிலும் மாற்றம்

வடக்கில் ஏற்பட்ட அனர்த்த நிலை குறைவடைந்துள்ளது. எவ்வாறாயினும் இடம்பெயர்ந்த குடும்பங்கள் தொடர்ந்தும் நலன்புரி முகாம்களில் தங்கியிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. இவர்களுக்கு தேவையான சகல நிவாரணங்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

இங்கு உரையாற்றிய அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார ;

“வடக்கில் ஏராளமான வீடுகள் முற்றாகவும் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் இவற்றை திருத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். உள்ளுராட்சிமன்றங்கள் மூலம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்பறவு செய்யும் பணிகள் இடம்பெறும். ஏராளமான மாணவர்களின் கற்றல் உபகரணங்கள் அழிந்துள்ளன. இம்மாணவர்களுக்கு புதிய பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்படும். திடீர் அனர்த்தங்கள் காரணமாக 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். பொலிசாரும் முப்படையினரும் உடனடியாக செயற்பட்டமையினால் ஒரேயொரு மரணம் மட்டுமே சம்பவித்தது. வடக்கு, தெற்கு மலையகம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் நாம் அனைவரும் இலங்கையர்கள். நாம் அனைவரும் இணைந்து அவர்களுக்கு உதவ வேண்டும். ” என தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் வஜிர அபேவர்தன ;

“தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை நாங்கள் ஒருசில வாரங்களில் வழமைக்கு கொண்டு வருவோம். பிரதமர் 28ம் திகதி கிளிநொச்சிக்கு செல்ல தீர்மானித்துள்ளார். இதன்மூலம் அவர் உரிய தீர்மானங்களை மேற்கொள்வார். உள்ளுராட்சிமன்றங்களை ஒழுங்கமைத்து நிவாரண பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம். தெற்கில் பெரும் அனர்த்தம் ஏற்பட்ட போது யாழ், கிளிநொச்சி, முல்லைதீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களில் இருந்து லொறிகள் அனுப்பப்பட்டன. தற்போது தெற்கில் இருந்து 100 லொறிகளை வடபகுதிக்கு அனுப்ப நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். பொதுமக்கள் புதிய பாடநூல்கள் மற்றும் புதிய உடைகளை அருகில் உள்ள மாவட்ட செயலகங்களிடம் ஒப்படைக்கலாம்.” என தெரிவித்தார்.

முல்லைதீவு ஒட்டுசுட்டானில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. பா.உ செல்வம் அடைக்கலநாதனின் தலைமையில் யாழ் இளைஞர்கள் அமைப்பினால் உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.

அத்துடன் முல்லைதீவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீதிகளை இராணுவத்தினர் துப்பறவு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இம்மாவட்டங்களில் தொடர்ச்சியாக பெய்து வந்த அடை மழை காரணமாக வீதியோரங்களில் இருந்த மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் மக்களின் போக்குவரத்துக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 27, 2018 13:31

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க