fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இது ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கம்-அமைச்சர் லக்ஷ்மன்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 25, 2018 13:28

இது ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கம்-அமைச்சர் லக்ஷ்மன்

அடுத்து முன்வைக்கப்படவுள்ள வரவு செலவு திட்டம் இந்நாட்டின் மிக சிறந்த வரவு செலவு திட்டமாக அமையும் என அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்துள்ளார். தெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாம் தற்போது அரசாங்கம் ஒனற்றை அமைத்துள்ளோம். இது கூட்டமைப்பு அரசாங்கம் அல்ல. ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் ஆகும். இதற்கு பிறகு எந்தவொரு கட்சியுடனும் நாம் கூட்டு வைக்க போவதில்லை. ஏனையோர் எமது அரசாங்கத்தில் இணைய வேண்டுமாக இருந்தால் நேரடியாக ஐக்கி தேசிய முன்னணியில் இணைய வேண்டும். நாம் பெப்ரவரியில் வரவு செலவு திட்டத்தை கொண்டுவரவுள்ளோம். அந்த வரவு செலவு திட்டம் இலங்கை வரலாற்றில் மிகச்சிறந்த வரவு செலவு திட்டமாக அமையும். அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும். எங்களுக்கு தேவையான சமுர்த்தி அதிகாரிகளை கிராமங்களுக்கு நியமிப்போம். எமது வீட்டு திட்டங்களை மேலும் விரிவுப்படுத்துவோம். ஓய்வூதியம் பெறுவோருக்கான நிவாரணங்களையும் அதிகரிப்போம் என தெரிவித்தார்.

தெல்தெனிய ஐக்கிய தேசிய கட்சி அரசியல் சபை கூட்டத்திலேயே அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்ல இவ்வாறு தெரித்தார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 25, 2018 13:28

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க