fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விபத்தில் ஒருவருக்கு காயம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 25, 2018 13:14

விபத்தில் ஒருவருக்கு காயம்

ரோஸ்மீட் பிரதேசத்தில் உள்ள முச்சந்தியில் இடம்பெற்ற விபத்தில் சுயாதீன தொலைகாட்சி ஊடகவியலாளர் ஒருவர் கடும் காயங்களுக்குள்ளானார்.

ரோஸ்மீட் பிரதேசத்தின் முச்சந்தியில் அதிவேகமாக பயணித்த மோட்டார் வாகனமும் கெப் வண்டியும் மோதுண்டுள்ளது. அந்த கெப் ரக வாகனம் தூக்கி வீசப்பட்டதோடு, அருகில் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டு விபத்து இடம்பெற்றது. சுயாதீன தொலைகாட்சி பிராந்திய ஊடகவியலாளர் சுனில் ஹேவாவிதாரன மோட்டார் சைக்கிளில் இருந்துள்ள நிலையில் அவரது கைகளிலும் கால்களிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. கெப் வண்டியில் இருந்த ஒருவரும் காயமடைந்தார். இவர்கள் இருவரும் தேசிய வைத்தியசாலை அவசர விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பில் கருவாதோட்ட பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 25, 2018 13:14

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க