fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 25, 2018 13:08

துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி

தங்கல்ல குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நான்கு பேர் பலியானதுடன் ஐவர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸ் மாஅதிபரின் பணிப்புரைக்கமைய தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் மற்றும் மாத்தறை தங்கல்ல மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாச்சிசூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இவர்களை கைது செய்வதற்கான விரிவான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இச்சம்பவத்தினால் காயமடைந்தவர்கள் தங்கல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடும் காயங்களுக்கு உள்ளான ஒருவர் சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 25, 2018 13:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo